🔥 TRENDING ਵਿਧਾਇਕ ਦਿਨੇਸ਼ ਚੱਢਾ ਵੱਲੋਂ ਪਿੰਡ ਟੇਢੇਵਾਲ... Aji Thomas, a state शिक्षा सुधार और स्नातक अधिकारों की रक्... ठाकरे बंधुओं का चुनाव आयोग के खिलाफ मु... दुर्गा पूजा: एसडीपीओ और थाना प्रभारी न... Tripura CM Unveils 21 Projects Worth O...
12 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

வேலூர் மாநகராட்சிப் பகுதியில் மழைநீர் கால்வாய்களைத் தூர்வார நடவடிக்கை

✍️ Reporter: A RAM PRABHU 🗓 12 Oct 2026, 04:51 PM 👁 22
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

வேலூர் மாநகராட்சிப் பகுதியில் உள்ள மழைநீர் செல்லும் கால்வாய்களைத் தூர்வாரும் பணிகள் ரூ பத்து லட்சம் மதிப்பில் நடைபெற உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
​ வேலூர் மாநகராட்சியின் முக்கிய மழைநீர் கால்வாயான 'நிக்கல்சன் கால்வாய்' முள்ளிப்பாளையம் பகுதியில் தொடங்கி, வேலூர் ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் வரை செல்கிறது. இக்கால்வாய் முழுமையாகத் தூர்வாரப்பட உள்ளது.
​முள்ளிப்பாளையம், பஸ் ஸ்டாண்ட் ச்பேட்டை, இந்திரா நகர், திடீர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கிருக்கும் சிறிய அளவிலான வாய்க்கால்கள் மற்றும் திறந்தவெளி மழைநீர் கால்வாய்களும் தூர்வாரப்பட உள்ளன. மழைநீர் கால்வாய்களைத் தூர்வாருதல், தடுப்புச் சுவர்கள் அமைத்தல் மற்றும் நீர்நிலைகளின் கரைகளைப் பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ​இப்பணிகளுக்காக டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் தூர்வாரும் பணிகள் முழுவீச்சில் தொடங்கும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்
📲Get App