🔥 TRENDING Madhya Pradesh Cabinet Delays Cooperat... Ashok Gahlot slams BJP for horse‑tradi... ತಾಲೂಕಿನ ವಿವಿಧ ಗ್ರಾಮಕ್ಕೆ ತೆರಳಿ ಗ್ರಾಮದ ಕ... *25 नवंबर से खैरथल-तिजारा जिले में उर्... ಬಸವಣ್ಣನವರ ಕುರಿತು ಅವಹೇಳನಕಾರಿ ಹೇಳಿಕೆ - ರ... ఇచ్చోడ:రూ.7 కోట్లతో విద్యా సంస్థల అభివ...
23 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
Local

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து சீரமைப்பு: ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை

✍️ Reporter: s.dinesh 🗓 23 Nov 2026, 03:18 PM 👁 32
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கைக்கு பதிலாக, போக்குவரத்து சீரமைப்புக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வேலூர் புதிய பேருந்து நிலையத்தின் பார்க்கிங் பகுதியை நேரில் ஆய்வு செய்து, ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஆட்டோ ஓட்டுநர்கள் முன்வைத்த முக்கியக் கோரிக்கையாக, காட்பாடியில் இருந்து வேலூர் செல்லும் பேருந்துகள் பழைய பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்ட பின்னர், புதிய பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை இறக்கிவிட்டு, மீண்டும் பிரதான சாலையில் இடதுபுறமாக நின்று தொடர்ந்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் உடனடியாக ஆலோசனை மேற்கொண்டு, அதனை நடைமுறைப்படுத்த உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், வேலூர் புதிய பேருந்து நிலையத்தின் உள்ளே இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் கார்கள் அனுமதிக்கப்படுவதைத் தவிர்த்து, பேருந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளவும், இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு போக்குவரத்துக் கழகம் சார்பில் கடிதம் அனுப்ப அறிவுறுத்தப்பட்டது.

இந்த ஆய்வின்போது காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் ம. சுதாகர் அவர்கள், போக்குவரத்துக் கழக துணை மேலாளர் (வணிகம்) மற்றும் பேருந்து நிலையப் பொறுப்பாளர் ஆகியோர் உடனிருந்தனர்.
📲Get App