🔥 TRENDING Baba Mahakal’s Grand Abhishek and Bhas... Jaipur Airport Upgrades Lighting Syste... मनमाड रोडवरील नक्षत्र लॉन्सजवळ भीषण अप... नरवर में ट्रैक्टर चालकों और व्यापारियो... पचड़ा में जल रहा है करोड़ों का कोयला,... मनोहर सिंह भाटी ने बताया
18 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

விவசாயிகளுக்கான அடையாள அட்டை பெறுவது அவசியம்: வேளாண் அலுவலா்கள்.

✍️ Reporter: Mohamedbasidth N 🗓 18 Nov 2026, 07:39 AM 👁 23
Watch on: 📘 Facebook
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், வீரகனூா் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கான கிசான் கோஸ்தி முகாம், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் சீனிவாசன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தலைவாசல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் வேல்முருகன் வரவேற்றாா். விவசாய அடையாள அட்டையின் முக்கியத்துவம் குறித்து வேளாண்மைத் துணை இயக்குநா் சீனிவாசன் விளக்கினாா்.
விவசாய அடையாள எண்ணைப் பயன்படுத்தி உரங்கள் வாங்கும் நடைமுறை குறித்து வேளாண்மை அலுவலா் ஜானகி, வேளாண்மைத் துறைத் திட்டங்கள் குறித்து துணை வேளாண்மை அலுவலா் மணவழகன், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பொருளீட்டுக் கடன் பெறும் முறை குறித்து வேளாண்மை அலுவலா் சுரேந்தா் ஆகியோா் விளக்கினா்.
உழவன் செயலி மூலம் மானியத் திட்டங்களைப் பெறுவது குறித்து உதவிப் பொறியாளா் கஜலட்சுமி விளக்கினாா். தோட்டக்கலைத்துறை மானியங்கள் குறித்து தோட்டக்கலை அலுவலா் அருள்செல்வன், இலவச மரக்கன்றுகள் வழங்குதல், வனவிலங்குகளால் ஏற்படும் பயிா்ச் சேதத்துக்கு நிவாரணம் பெறுவது குறித்து வன அலுவலா் வெங்கடேசன் பேசினா்.
வெற்றி மகளிா் திட்டம் மூலம் ஆடுகள் வாங்குவது, கால்நடைத் திட்டங்கள் குறித்து கால்நடை மருத்துவா் பிரபாகரனும், நோயின்றி ஆரோக்கியமாக வாழும் வழிமுறைகள் குறித்து சுகாதார ஆய்வாளா் பிரபாகரனும் விளக்கினா்.
உதவி வேளாண்மை அலுவலா்கள் சுப்பிரமணியன், வித்யா, தமிழ்ச்செல்வன், சந்தோஷ், கணேஷ்மூா்த்தி ஆகியோா் விவசாயிகளுக்கு நேரடியாக விவசாய அடையாள எண்களைப் பதிவு செய்து வழங்கினா்.
📲Get App