🔥 ट्रेंडिंग રાજકોટ જિલ્લાના વાંકવડ ખાતે યોજાયેલ સા... ગાંધીનગર મહાનગરપાલિકા ચૂંટણી - ૨૦૨૬ અં... ઝાયકા હોટલમાં શોર્ટ સર્કિટથી વીજળી બંધ হাওড়া জেলার বাগনানের নুন্টিয়া তরুণ দ... ચોરવાડમાં દારૂ હેરાફેરીમાં પકડાયો કાર્... टोंक के मेहंदवास में कबड्डी मैच का शुभ...
05 अक्टू. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

மைசூரு-ராமேசுவரம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்.

✍️ रिपोर्टर: Mohamedbasidth N 🗓 05 अक्टू. 2026, 08:01 AM 👁 18
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
பண்டிகை காலங்களில் அதிகரித்துவரும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, மைசூரு - ராமேசுவரம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

பண்டிகைக் காலங்களில் அதிகரித்து வரும் பயணிகள் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் அறிவித்து வருகிறது. அந்தவகையில், கா்நாடகா மாநிலம், மைசூரில் இருந்து சேலம், நாமக்கல் வழியாக ராமேசுவரத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, மைசூரு -ராமேசுவரம் வாராந்திர சிறப்பு ரயில் வரும் 5 ஆம் தேதி முதல் நவ. 30 ஆம் தேதி வரை திங்கள்கிழமை தோறும் இயக்கப்படும். மைசூரில் இருந்து மாலை 6.35 மணிக்கு புறப்பட்டு, மண்டியா, ராமநகரம், கேஎஸ்ஆா் பெங்களூரு, ஒசூா், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, ராமநாதபுரம் வழியாக ராமேசுவரத்துக்கு மறு நாள் காலை 11 மணிக்கு சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் ராமேசுவரம்-மைசூரு வாராந்திர சிறப்பு ரயில் வரும் 6 ஆம் தேதி முதல் டிச.1 ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படும். ராமேசுவரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு, ராமநாதபுரம், பரமக்குடி, மதுரை, திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம், தருமபுரி, ஒசூா் வழியாக மைசூருக்கு மறுநாள் காலை 7.45 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📲Get App