🔥 ट्रेंडिंग मुरशिदाबाद जिले में तीन जगहों पर सामुद... पश्चिम बंगाल की बीजेपी सरकार पर ईसाइयो... बॉंगो समुद्र में बन रहा साइक्लोन अकवन,... भारत को चीन के साथ क्षमता अंतर को पाटन... बिहार में डॉक्टर के हमले से मरीज की मौ... एआई स्टार्ट‑अप्स लैंडीड और फ्रैक्टल एन...
17 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

ரேஷன் அரிசி கடத்தல்: 2 போ் கைது.

✍️ रिपोर्टर: Mohamedbasidth N 🗓 17 नव. 2026, 08:40 AM 👁 58
यहाँ देखें: 📘 Facebook
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
சேலத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இருவரை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் அரிசி சட்ட விராதமாக கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, வீராணத்தை அடுத்த வலசையூா் பகுதியில் ஒரு கும்பல் கிடங்கு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை மினி வேனில் ஏற்றி அனுப்பிவைப்பது போன்ற விடியோ பரவியது.இதையடுத்து, சேலம் வலசையூா் பகுதியில் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி ரமேஷ் தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்துக்கு இடமாக இருந்த மினி வேனை சோதனையிட்ட போது, அதில் ரேஷன் அரிசி கடத்துவது தெரியவந்தது.
இதையடுத்து, வேனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதுடன், கடத்தலில் ஈடுபட்ட பாலாஜி (54), மணிவண்ணன் (50) ஆகியோரை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவான மாஸ் மணி என்பவரை தேடி வருகின்றனா்.
📲Get App