🔥 TRENDING Two bodies recovered near Chamundi Hil... Radhika Apte Says She Navigated South... Tripura’s Raju Mog Welcomed Home After... 21 Arrested in Tripura After BSF Attac... Three dead after couple flees onto rai... ખાંભામાં ગાડી ભાડાની તક્કરામાં તલવાર-છ...
09 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

நாகையில் 10 ஆண்டுகளாக உறவற்ற ஏழை எளிய குழந்தைகளின் புத்தாடை கனவை நிறைவேற்றி வரும் சமூக ஆர்வலர்

✍️ Reporter: MAHENDRAN M 🗓 08 Nov 2026, 11:40 PM 👁 18
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

-

நாகப்பட்டினம் மாவட்டம் காக்கழனி
கிராமத்தைச் சேர்ந்தவர் லெனின். இவர் சமம் அறக்கட்டளை சார்பில் கல்வி உதவி மருத்துவ உதவி பேரிடர் காலங்களில் பொது மக்களுக்கு அத்யவாசிய உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். மேலும் தீபாவளி திருநாளில் உறவற்ற , தாய் தந்தை இழந்த, ஏழை எளிய குழந்தைகளின் தீபாவளி புத்தாடை கனவை கடந்த 10 ஆண்டுகளாக நிறைவேற்றி வருகிறார். அதே போன்று இந்த ஆண்டும் வெளிநாடு நண்பர்கள் விக்னேஸ் சிவசுப்ரமணியன், கல்யாண சுப்பு, அருண்மணி, விஜயானந்த் ரெங்கராஜன், ராசாத்தி ஆனந்தன், பிரசன்னன் கிருஷ்ண சர்மா, அய்யனார் கலாம், துரை ஆகியோரின் நிதி பங்களிப்போடு 15 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு புத்தாடை வாங்கி கொடுத்துள்ளார். வசதி படைத்த குழந்தைகளை் போலவே இந்த குழந்தைகளையும் நகரின் பிரமாண்ட்ட துணிக்கடைக்கு குழந்தைகளை நேரில் அழைத்துச் சென்று அவர்களுக்கு பிடித்த உடைகளை அவர்களையே தேர்ந்தெடுக்க வைத்து புத்தாடை வாங்கி கொடுத்து குழந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அதே போன்று உயர்ரக உணவகத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு பிடித்த உணவுகளையும் சாப்பிட வைத்து பட்டாசு, இனிப்புகளையும் வழங்கி அவர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ள சம்பவம் அனைவரையும் நெகழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
📲Get App