🔥 TRENDING હાજીપીર રોડ ઢોરા ગામ પાસે વધુ એક જીવલે... बहराइच में शादी समारोहों के कारण 24‑11... સંતરામપુરમાં ખેતીમાં કેમિકલ મુક્ત પદ્ધ... ಅರಕೆರೆ ತಾಲೂಕಿನಿಂದ ಕೈಬಿಟ್ಟು ಪುನಃ ದೇವದುರ... Senior IAS Officer Appointed Joint Sec... Kerala Releases Provisional List for N...
24 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காட்பாடி அருகே மாற்றுத்திறனாளி இளைஞர் வெட்டிக் கொலை – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

✍️ Reporter: A RAM PRABHU 🗓 24 Nov 2026, 02:04 PM 👁 31
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த எல்ஜி புதூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான தினகரன் என்பவரை வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்ஜி புதூர் பகுதியில் இரவு நேரத்தில் வீட்டிலிருந்த மாற்றுத்திறனாளி இளைஞர் தினகரனை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாகத் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், குடும்ப தகராறிலா, சொத்து பிரச்சினையா அல்லது முன்விரோதம் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இக்கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களைப் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
📲Get App