🔥 TRENDING Malkajgiri Municipal Corp to lay found... राजपुर नगला में प्रधान अवधेश यादव की स... Khammam Student Dies of Suspected Card... मलकानगिरी में 26 अक्टूबर से भ्रष्टाचार... IMD Forecasts Super Typhoon Champi to... Phone pe company winner
23 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

இருசக்கர வாகன ஓட்டியைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து லோடு வேன் கவிழ்ந்து இருவர் உயிர் தப்பினர்

✍️ Reporter: A RAM PRABHU 🗓 23 Oct 2026, 10:01 PM 👁 11
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
வேலூர் மாவட்டம் காட்பாடியில் இருந்து குடியாத்தம் நோக்கி லோடு வேன் சென்றுகொண்டிருந்தது. வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா வேப்பங்கநேரி ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னியம்மன் கோயில் அருகே உள்ள காட்பாடி குடியாத்தம் நெடுஞ்சாலையில் வேன் வந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் ஒன்று தாறுமாறாக வந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது இருசக்கர வாகன ஓட்டி வந்த நபர் மீது மோதாமல் இருக்க வேனைத் திருப்ப முயன்றபோது எதிர்பாராதவிதமாக வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வேனின் ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் ஆகிய இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விபத்தைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து இருவரையும் மீட்டனர். அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது தங்களுக்குப் பெரிய அளவில் காயம் ஏதும் இல்லை எனக் கூறி அவர்கள் மருத்துவமனை செல்ல மறுத்துவிட்டனர்.நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்து அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்து குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கே.வி.குப்பம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📲Get App