திருச்சுழி காவல் நிலையம் அருகே பணியில் இருந்த கார்பெண்டர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு*
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி காவல் நிலையம் அருகே உள்ள கிழக்கு தெரு பகுதியில் முனியசாமி என்பவருக்கு சொந்தமான புதிய வீடு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் அந்த வீட்டில் தச்சுவேலை பார்ப்பதற்காக பனையூர் கிராமத்தைச் சேர்ந்த காளீஸ்வரன் என்பவர் மகன் திருமுருகன் (39), சாமிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த குமரவேல் மகன் புவனேஸ்வரன் (32)ஆகியோர் தச்சுவேலை (கார்பெண்டர்) செய்து கொண்டிருந்தனர்.
அப்போது வீட்டிற்கு வெளியே சுவர் மீது இரும்பு ஏணியில் ஏறி வேலை செய்த போது எதிர்பாராத விதமாக மின்சார வயர்கள் மீது இரும்பு ஏணி பட்டதில் மின்சாரம் பாய்ந்து திருமுருகன் மற்றும் புவனேஸ்வரன் தூக்கி வீசப்பட்டனர்.
மேலும் மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே திருமுருகன் உயிரிழந்த நிலையில், காயமடைந்த புவனேஸ்வரன் க்கு திருச்சுழி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்சுழி போலீசார் உயிரிழந்த திருமுருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனை பிணவறைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் காயமடைந்த புவனேஸ்வரன் க்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து திருச்சுழி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் புதிய வீடு கட்டுமானப் பணியின் போது மின்சாரம் தாக்கி கார்பெண்டர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.