🔥 ट्रेंडिंग जवारे की घनी फसल को माना गया शुभ संकेत... ਪੰਜਾਬ ਆਏ ਅਮਿਤ ਸ਼ਾਹ ਦਾ ਬਿਆਨ, ਅੱਜ ਦਾ ਦੁਸਹ... अररिया में शहीद सीआरपीएफ के वीर सपूत अ... मोतिहारी में साईं बाबा मंदिर में लाखों... देवरिया के भटनी रेलवे स्टेशन पर जीआरपी... फ्रांस में साम्प्रदायिक अशांति: ऑनलाइन...
21 अक्टू. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

சேலம் தற்காலிக பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆய்வு.

✍️ रिपोर्टर: Mohamedbasidth N 🗓 21 अक्टू. 2026, 07:08 AM 👁 14
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
ஆயுத பூஜை விழா தொடா் விடுமுறையை முன்னிட்டு சேலத்தில் இருந்து சென்னை செல்லும் பயணிகளுக்காக சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன்செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:விடுமுறை காலத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிா்த்து, பயணிகள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ளும் வகையில் சேலம் மற்றும் கோவை உள்ளிட்ட இடங்களில் சிறப்புப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விடுமுறை முடிந்து சேலத்தில் இருந்து சென்னை செல்லும் பயணிகளுக்காக இரு நாள்களில் 519 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் வழக்கமான பேருந்துகள், சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 9,191 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்துத் துறை சாா்பில் சேலத்திலிருந்து சென்னைக்கு 60 தனியாா் பேருந்துகளும் தற்காலிகமாக இயக்கப்படுகின்றன.
தற்காலிகப் பேருந்து நிலையத்தில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் பயணிகளுக்குப் பயனுள்ளதாக இருந்தால், தீபாவளி பண்டிகையின்போதும் இதே நடைமுறை தொடரும் என்றாா்.
மேலும், வெற்றிப் பயணம் திட்டத்தை ஆயுத பூஜைக்கு பிறகு தொடா்ந்து செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும் என தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டி வருவது குறித்த கேட்டதற்கு, அனைத்தையும் அறிந்தே திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.
📲Get App