தலைவாசல்; சேலம் மாவட்டம், தலைவாசல் அதன் சுற்றுவட்-டாரகன மழை பெய்தது.
यहाँ देखें:
📘 Facebook
தலைவாசல்; சேலம் மாவட்டம், தலைவாசல் அதன் சுற்றுவட்-டார பகுதிகளான, நத்தக்கரை, பெரியேரி, ஆற-களூர், கோவிந்தம்பாளையம், மும்முடி, சித்தேரி, புளியங்குறிச்சி, புத்துார் பகுதிகளில், நேற்று, மதியம், 12:10 மணியளவில், கன மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கு மேல் மழை பெய்ததால், சாலை, தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.கன மழையாக பெய்ததால், விவசாய நிலங்-களில் மழை நீர் தேங்கி நின்றது. ஒரு மணி நேரம் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்-ளனர்.*வாழப்பாடி சுற்றுவட்டார பகுதியில் நேற்று, காலை முதல் மிதமான வெயில் அடித்த நிலையில், மதியம் 2:00 மணிக்கு திடீரென கரு-மேகங்கள் சூழ்ந்து, வாழப்பாடி, முத்தம்பட்டி, மேட்டுப்பட்டி,கருமாபுரம்,வெள்ளாளகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. மழையால் வாழப்பாடி சுற்றுவட்டார பகுதியில் குளிர் நிலவியது.