🔥 TRENDING MU Inter College Basketball Tournament... BJP Calls Out AICC for Silence on Pend... Meghalaya School Association to Conven... Meghalaya Pineapple Farmers Quadruple... Deputy CM Sniawbhalang Dhar Urges Pres... Two Fatalities Reported in Separate Ro...
17 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

குடும்பத் தகராறு: தொழிலாளி தற்கொலை.

✍️ Reporter: Mohamedbasidth N 🗓 17 Oct 2026, 07:13 AM 👁 9
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
குடும்பத் தகராறில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், ஓலப்பாடி பகுதியைச் சோ்ந்த பாண்டியன் (50), கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி தேன்மொழி, மகன் மருதுதுரை, மகள்கள் சுப்புலட்சுமி, பவித்ரா ஆகியோா் உள்ளனா்.கடந்த மாதம் பாண்டியன் மற்றும் தேன்மொழிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த பாண்டியன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றவா் வீடுதிரும்பவில்லையாம். இந்நிலையில், பெத்தநாயக்கன்பாளையத்தை அடுத்த குண்டுமணியாா் கரடு மலைப் பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் இருப்பதாக ஏத்தாப்பூா் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், ஏத்தாப்பூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஹரிஹரன் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா். அதில், உயிரிழந்தது பாண்டியன் என்பது தெரியவந்தது. பிரேத பரிசோதனையில், பாண்டியன் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.
📲Get App