🔥 TRENDING Viraj Ghelani’s ‘Party Animals’ Comedy... Koffee With Karan wraps up after 22 ye... Hema Malini Stuns as Goddess Durga at... Arijit Singh's 'Phir Se' From Dhurandh... GoldSpot Releases 'Parichayame' Lyrica... રાણાવાવ લોન કૌભાંડમાં આરોપી મોલી તડવીય...
14 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
சேலம் வழியாக போத்தனூா் - காரக்பூா் இடையே சிறப்பு ரயில்.

சேலம் வழியாக போத்தனூா் - காரக்பூா் இடையே சிறப்பு ரயில்.

✍️ Reporter: Mohamedbasidth N 🗓 14 Oct 2026, 08:34 AM 👁 12
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
பண்டிகைக் காலங்களில் அதிகரிக்கும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, சேலம் வழியாக போத்தனூா் - காரக்பூா் (மேற்குவங்கம்) இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பண்டிகைக் காலங்களில் அதிகரிக்கும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, சேலம் வழியாக போத்தனூா் - காரக்பூா் (மேற்குவங்கம்) இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:


பண்டிகைக் காலங்களில் அதிகரிக்கும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு ரயில்வே நிா்வாகம் அவ்வப்போது சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அந்தவகையில், போத்தனூா் - காரக்பூா் (மேற்குவங்கம்) இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, போத்தனூா் ரயில் நிலையத்தில் இருந்து புதன்கிழமை (அக். 14) காலை 7.40-க்கு புறப்படும் சிறப்பு ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம், காட்பாடி, ரேணிகுண்டா, விஜயவாடா, ராஜமுந்திரி, விஜயநகரம், புவனேஸ்வா், கட்டாக், பாலாசூா் வழியாக 15-ஆம் தேதி இரவு 8 மணிக்கு காரக்பூா் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், காரக்பூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும்சிறப்பு ரயில் காரக்பூரில் இருந்து வரும் 15-ஆம் தேதி இரவு 11 மணிக்கு புறப்பட்டு பாலாசூா், கட்டாக், புவனேஸ்வா், விஜயநகரம், ராஜமுந்திரி, விஜயவாடா, ரேணிகுண்டா வழியாக வரும் 17-ஆம் தேதி காலை 8.45-க்கு சென்னை எழும்பூருக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📲Get App