🔥 TRENDING पटना सिटी के अगमकुंआ थाना क्षेत्र में... शिव विधायक रविन्द्र सिंह भाटी का कुचेर... Amar Ujala Releases Weather Forecast f... Modi completes 25 years as India’s top... India Removes 130 Million Names From V... NDA allies stress Modi’s continuity an...
07 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

வீட்டில் புகுந்த வாலிபர் போலீசிடம் ஒப்படைப்பு.

✍️ Reporter: Mohamedbasidth N 🗓 07 Oct 2026, 07:12 AM 👁 13
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
ஓமலுார்:ஓமலுார் காமராஜர் நகர், 5வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் புகுந்த வாலிபரை பிடித்து, பூட்டி வைத்துள்ளோம் என அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.இதையடுத்து அங்கு சென்ற ஓமலுார் போலீசார் வீட்டை திறந்து, பீரோ உள்ள அறையில் பதுங்கியிருந்த வாலிபரை பிடித்து வெளியே கொண்டு வந்தனர்.


வாலிபரை பொதுமக்கள் தாக்க முயன்ற போது, போலீசார் அவர்களை தடுத்தனர். அப்போது வாலிபரின் நடவடிக்கையை பார்த்த போது மனநலம் பாதித்தவர் என தெரிய வந்தது. வீட்டில் எதுவும் திருட்டு போகவில்லை என்பதால், போலீசார் விசாரிக்க ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
📲Get App