🔥 ट्रेंडिंग અમરેલીમાં પર્યાવરણલક્ષી ત્રિવિધઅભિયાન... વડોદરાની પાલિકાએ 6 વર્ષથી ગરબા સ્પર્ધા... রবিবার রাতে new digha hoteliers associ... राजद के दिवंगत विधायक डॉ सच्चिदानंद या... મહીસાગરના ખેલાડીઓ સાથે જગદીશભાઈ પંચાલે... राजद के दिवंगत विधायक डॉ सच्चिदानंद या...
05 अक्टू. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு.

✍️ रिपोर्टर: Mohamedbasidth N 🗓 05 अक्टू. 2026, 07:59 AM 👁 16
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் இன்று (அக். 5) பள்ளிகள் திறக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகள் முடிந்து, விடுமுறை அறிவிக்கப்பட்டு, 9 நாள்கள் விடுமுறையும் ஞாயிற்றுக்கிழமையுடன் (அக். 4) நிறைவடைகிறது.


இதனையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் இன்று (அக். 5) பள்ளிகள் திறக்கப்படுகிறது.
மேலும், ஒன்று முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாடப்புத்தகங்களும் இன்று வழங்கப்படவுள்ளது.
இருப்பினும், செவ்வாய்க்கிழமையில் (அக். 6) மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறவிருப்பதால், இரு தொகுதிகளுக்குள்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அக். 5, 6 தேதிகளிலும், தனியார் பள்ளிகளுக்கு அக். 6 மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு தொகுதிகளுக்குள்பட்ட பள்ளிகள் அக். 7 ஆம் தேதியில் திறக்கப்படுகிறது.
📲Get App