🔥 TRENDING Satyam খাঁটি ঘী তৈরী হচ্ছে ઉગલવાણ ગામે પંચાયતની કામગીરી સામે ગ્રા... Wife Arrested in Thane After Husband's... Coal Truck Crash in Chutupalu Valley I... Bhopal Murder Plot Unveiled: Rs 1-Cror...
04 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்எஸ்எஸ் நிறைவு விழா

✍️ Reporter: Karamchand Gandhi Vedhanayagam 🗓 04 Oct 2026, 09:44 AM 👁 15
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
தஞ்சாவூர் மாவட்டம்,
பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப் பணித் திட்ட நிறைவு விழா வெள்ளிக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

காலகம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆர். ராமநாதன் தலைமை வகித்தார். நேதாஜி மருதையர் அறக்கட்டளை தலைவர் ஏ.எஸ்.ஏ.தெட்சிணாமூர்த்தி, லயன்ஸ் சங்க தலைவர் ஜி.ராஜா, செயலாளர் என்.அருண், பொருளாளர் பாரதி, வர்த்தக சங்க முன்னாள் தலைவர் ஆர்.பி. ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திட்ட அலுவலர் கே.சோழ பாண்டியன் வரவேற்றார்.
காலகம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆர். ராமநாதன், உடையநாடு அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் த.சோமு மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்திப் பேசினர்.

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் நா.நடராஜன், எம்.சரவணபவா, எஸ்.மதியழகன், பி.அசோக் மற்றும் லயன்ஸ் சங்க நிர்வாகிகள், பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக ஆசிரியர் சி.கணேசன் நன்றி கூறினார். லயன்ஸ் சங்கம் மற்றும் நேதாஜி மருதையர் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
📲Get App