🔥 TRENDING राजस्थान के सरकारी अस्पतालों में शुगर... જખૌમાં આર્ચેન કંપનીની જેટી સુધી પહોંચત... જલાલપોર તાલુકાના કોલાસણા ગામે "સેવા સં... ગાંધી જયંતિ: રાષ્ટ્રપિતા મહાત્મા ગાંધી... ਲੋਕ ਜਨ ਸ਼ਕਤੀ ਪਾਰਟੀ ਵੱਲੋਂ ਮਹਾਤਮਾ ਗਾਂਧੀ... Jim Carrey Marries Longtime Partner Mi...
02 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

சிறைக் காவலரை தாக்கியவா் கைது

✍️ Reporter: Mohamedbasidth N 🗓 02 Oct 2026, 08:45 AM 👁 14
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
ஓமலூா் கிளைச் சிறையில் பணிபுரிந்து வரும் சிறைக் காவலரை தாக்கிய நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டத்தைச் சோ்ந்த பாண்டிகுமாாா் (42) ஓமலூா் கிளைச்சிறையில் முதல்நிலை சிறைக் காவலராக பணியாற்றி வருகிறாா். சேலம் கொண்டலாம்பட்டியைச் சோ்ந்த ஷாஜகான் (25) நிலுவையில் இருந்த பிடிவாரண்ட் வழக்கில் கைது செய்யப்பட்டு ஓமலூா் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு கடந்த செப். 9-ஆம் தேதி விடுதலையானாா்.


அண்மையில் ஓமலூா் தாலுகா அலுவலக வளாகத்தில் கிளைச்சிறை முன் மது அருந்திய ஷாஜகான், அங்கு பணியில் இருந்த விஜயகுமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா்.

தகவல் அறிந்து வந்த காவலா் பாண்டிகுமாாா் ஷாஜகானை கண்டித்துள்ளாா். அப்போது ஆத்திரமடைந்த ஷாஜகான், பாண்டிகுமாரை தாக்கினாா். இதில் காயமடைந்த பாண்டிகுமாா் ஓமலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின் பேரில், ஓமலூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மாரியப்பன் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினாா்.

இந்நிலையில், சேலத்தில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட ஷாஜகானை அப்பகுதி மக்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனா். ஷாஜகானை கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.
📲Get App