🔥 TRENDING पुनपुन थाना पुलिस ने 63 लीटर महुआ शराब... वगळलेल्या पात्र मतदारांसाठी विशेष संधी... लहसुना थाने में चाइल्ड हेल्प डेस्क का... JAC 12th Toppers List 2026 Released fo... Kerala Lottery: Suvarna Keralam SK-72... Glencore lifts 2026 profit forecast ab...
02 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
வானிலை தகவல்

வானிலை தகவல்

✍️ Reporter: Sudhakaran 🗓 02 Oct 2026, 09:10 PM 👁 13
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

வடகிழக்கு பருவமழை

🌀🚨⛈️☔⚠️🚨☔⛈️⚠️🚨☔

*02/10/2026 5:00 Pm*

*வடகிழக்கு பருவமழை - 2026*

*🛑இந்த ஆண்டு தமிழகம் , புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் வடகிழக்கு பருவழை இயல்பை விட கூடுதலாகவே இருக்கும்.*

*🛑அக்டோபர் 6,7.. தேதிகளில் தென்மேற்கு பருவக்காற்று விலகி வடகிழக்கு பருவக்காற்று வீச தொடங்கும்.*

*🌀அக்டோபர் 12,13 தேதிகளில் வங்கக்கடலில் உருவாகவிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது வடகிழக்கு பருவக்காற்றை ஈர்த்து வந்து தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் 12,13,14 தேதிகளில் பரவலாக மழையை கொடுத்து 🌊வடகிழக்கு பருவ மழையை தொடங்கி வைக்க அதிக வாய்ப்பிருக்கிறது ..*

*🌊அக்டோபர் 12,13. தேதிகளில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று ஆந்திரா , ஒடிசா நோக்கி நகருமேயானால் தமிழகம் , புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் மழை வாய்ப்பு தற்காலிகமாக தடைப்படும்.*

*🛑எல்நினோ காலக்கட்டங்களில் நமது இந்திய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை குறைவாகவும் வடகிழக்கு பருவமழை இயல்பாக அல்லது சற்று தீவிரமாகவும் இருந்திருக்கிறது.*

*🛑இந்த 2026 ஆண்டு தென்மேற்கு பருவமழையானது சூப்பர் எல்நினோ காலக்கட்டத்தில் அமைந்து மிகவும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. தமிழகம் ,புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டம் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் இயல்பை விட மிகவும் குறைவான மழையே பெய்திருக்கிறது.*

*🛑இந்த 2026 ஆண்டு வடகிழக்கு பருவமழையும் சூப்பர் எல்நினோ காலக்கட்டத்திலேயே அமைகிறது என்றாலும் இது வடகிழக்கு பருவமழையை செயலிழக்க செய்யாது மாற்றாக பருவமழையை தீவிரப்படுத்தும் அச்சம் வேண்டாம்.*

*🔥மழையில்லாத நாட்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும்.*

*🌎எல்நினோ மட்டும் அல்லாமல் IOD, Madden–Julian Oscillation, வங்கக்கடல் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள், புயல்கள் மற்றும் பருவக்காற்றின் அமைப்பு போன்றவை தமிழகம் , புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தின் மழை வாய்ப்பை கணிசமாக மாற்றுகின்றன. 2026-ல் El Niño-வுடன் IOD + MJO + வங்கக்கடல் அமைப்புகள் எப்படி இணைகின்றன என்பதுதான் மிகவும் முக்கியம்.*

*📌எல்நினோ அல்லது சூப்பர் எல்நினோ என்பது பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்கும் ஒரு காலநிலை நிகழ்வு.*

*📌எல்நினோ (El Niño-)வில் மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் கடல் மேற்பரப்பு இயல்பைவிட சூடாகும். Niño 3.4 பகுதியில் +0.5°C அல்லது அதற்கு மேல் வெப்பநிலை விலகல் இருந்தால் எல்நினோ நிலை எனப் பொதுவாகக் கருதப்படுகிறது.*

*📌சூப்பர் எல்நினோ - (Super El Niño)..வில் மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் கடல் மேற்பரப்பு வெப்பநிலை மிகவும் அதிகமாக இருக்கும்; பொதுவாக +2°C அல்லது அதற்கு மேல் Niño 3.4 பகுதியில் இருந்தால் மிக வலுவான சூப்பர் எல்நினோ எனக் குறிப்பிடப்படுகிறது.*

*📌(IOD (Indian Ocean Dipole – இந்தியப் பெருங்கடல் இருமுனை அலைவு)*

*📌(MJO (Madden–Julian Oscillation – மேடன்–ஜூலியன் அலைவு)*
📲Get App