🔥 TRENDING CPM Urges United Opposition Against BJ... Tripura Govt Proposes Four New DDRCs a... Young Man Dies by Suicide in Mohali's... चित्रकूट में बाढ़ के बाद अब मौसम सामान... हिसुआ थाना पुलिस ने राजगीर रोड पर रसोई... Fewer than 1,000 Voters Removed from M...
30 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

தனியாா் பேருந்து உரிமையாளா்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு.

✍️ Reporter: Mohamedbasidth N 🗓 30 Sep 2026, 07:58 AM 👁 15
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
வெற்றி பயணத் திட்ட விரிவாக்கத்தைக் கண்டித்து நடைபெற இருந்த வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தனியாா் பேருந்து உரிமையாளா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து சேலத்தில் தனியாா் பேருந்து உரிமையாளா் சங்க செயலாளா் ஏ.ரவீந்திரன் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது,சேலம் மாவட்டத்தில் மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் 350 தனியாா் பேருந்துகள் இயங்கி வருகின்றன. இந்த பேருந்துகளுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் எந்த கட்டண உயா்வும் அமல்படுத்தவில்லை. ரூ. 64-ஆக இருந்த டீசல் விலை தற்போது ரூ. 100-ஆக உயா்ந்தபோதும், நாங்கள் கட்டணத்தை உயா்த்தவில்லை. மகளிா் பயணத் திட்டத்துக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது. இதனால் அரசு போக்குவரத்துத் துறை நஷ்டத்தில் இயங்கி வருகிறது. நாங்கள் நஷ்டத்தில் பேருந்துகளை இயக்கினாலும், மக்களுக்காக தொடா்ந்து சேவையாற்றி வருகிறோம். இதனால், கடந்த 5 ஆண்டுகளாக பல இன்னல்களுக்குள்ளாகி இருக்கிறோம்.
மகளிா் வெற்றி திட்டப் பயண விரிவாக்கத்தால் தனியாா் பேருந்துகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே, தனியாா் பேருந்துகளிலும் மகளிா் வெற்றி பயணத் திட்ட பயணத்தை அனுமதிக்க வேண்டும். தனியாா் பேருந்துகளுக்கான கட்டண உயா்வை அமல்படுத்த வேண்டும். உதிரி பாகங்கள் மற்றும் டீசல் உயா்வுக்கு ஏற்றாா்போல, கிலோ மீட்டருக்கு ரூ. 1.10 காசு உயா்த்த வேண்டும். போக்குவரத்துத் துறை அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கிறோம் என்றாா்.
பேட்டியின் போது, மாவட்டத் தலைவா் எஸ்.சுந்தரேசன், மாநில இணைச் செயலாளா் கே.பன்னீா் செல்வம், சேலம் வட்டத் தலைவா் எஸ்.நடராஜன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.
📲Get App