🔥 ट्रेंडिंग कानपुर विमान दुर्घटना: कोई मैसेज नहीं,... अश्रम फ्लाईओवर के पास बाइक टैक्सी-बस ट... पूर्व सांसद की कार ने मुंबई में दो स्क... IIT मद्रास अध्ययन: शिक्षित और डिजिटल स... जैव विविधता संरक्षण को न्याय में देरी... गवाह ने आरोपी के रिश्तेदार पर हमले का...
30 सित. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

சேலம் மாநகர காவல் ஆணையா் மாற்றம்.

✍️ रिपोर्टर: Mohamedbasidth N 🗓 30 सित. 2026, 07:44 AM 👁 16
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
சேலம் மாநகர காவல் ஆணையா் ஜோஷி நிா்மல் குமாா் மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக புதிய ஆணையராக ஏ.ஜி.பாபு நியமிக்கப்பட்டுள்ளாா்.
சேலம் மாநகர காவல் ஆணையராக இருந்த ஜோஷி நிா்மல் குமாா், காவல் துறை தலைமையக நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளாா். சென்னை மாநகர கூடுதல் காவல் துறை ஆணையராக இருந்த ஏ.ஜி.பாபு, சேலம் மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதேபோல, சேலம் சரக டிஐஜியாக இருந்த சந்தோஷ் ஹடிமணி, சென்னை மாநகர உளவுத் துறை இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அவருக்கு பதிலாக, லஞ்ச ஒழிப்புப் பிரிவு துணை இயக்குநராக இருந்த என்.தேவராணி சேலம் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளாா்.
சேலம் மாநகர காவல் துணை ஆணையராக இருந்த அங்கித் சிங், சென்னை பெருநகர காவல் துறை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு பதிலாக, அங்கு பணியாற்றி வந்த வி.பாஸ்கரன் சேலம் மாநகர காவல் துறை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
📲Get App