🔥 TRENDING મારવાડી યુનિવર્સિટી સામે ABVPનો આરોપ:... नथमलपुर गांव में पुलिस ने 301 लीटर से... ਰਜਵੰਤ ਕੌਰ ਨਿਯੁਕਤ: ਮਹਿਲਾ ਕਾਂਗਰਸ ਦੀ ਸੀਨੀ... Chief Minister's 'Ram For Rich, Shiva... Kuldeep Yadav's Spellbinding Bowling P... फिल्म से प्रेरित वैज्ञानिक नितिन गुप्त...
29 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

ஏத்தாப்பூா் அருகே இளைஞா் அடித்துக் கொலை.

✍️ Reporter: Mohamedbasidth N 🗓 29 Sep 2026, 07:28 AM 👁 13
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
சேலம் மாவட்டம், ஏத்தாப்பூா் அருகே தும்பல் கிராமத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் லாரி ஓட்டுநா் தாக்கியதில் காயமடைந்த இளைஞா் 7 நாள்களுக்கு பிறகு உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், ஏத்தாப்பூா் அருகே உள்ள தும்பல் கிராமத்தைச் சோ்ந்தவா் விமல் (29). அதே கிராமத்தில் உள்ள வெல்டிங் பட்டறையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். கடந்த 20 ஆம் தேதி இரவு இவரது தாத்தா சேட்டு என்பவரிடம் சொத்தை எழுதிவைக்க வற்புறுத்தி, அதே பகுதியைச் சோ்ந்த இவரது தாய்மாமா லாரி ஓட்டுநா் வெங்கடேஷ் (38) என்பவா் மது போதையில் தகராறு செய்துள்ளாா்.அப்போது, தாத்தாவை தாக்கிய தாய்மாமாவை விமல் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், அருகில் இருந்த உருட்டுக்கட்டையால் தாக்கியதில் விமல் உள்காயமடைந்தாா். அருகிலுள்ள தும்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடுதிரும்பினாா்.

தலைப்பகுதியில் உள்காயம் ஏற்பட்டிருந்த நிலையில் விமலின் உடல்நிலை மோசமானதால், கடந்த 22 ஆம் தேதி பெத்தநாயக்கன்பாளையம் மற்றும் ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு விமலை அழைத்துச் சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினாா். இதையடுத்து, அங்கு 5 நாள்கள் சிகிச்சை பெற்று வந்த விமல் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதையடுத்து வெங்கடேஷ் மீதான அடிதடி வழக்கை திங்கள்கிழமை கொலை வழக்காக மாற்றி பதிவுசெய்த ஏத்தாப்பூா் போலீஸாா், அவரை தேடிவருகின்றனா்.
📲Get App