🔥 ट्रेंडिंग କ୍ରିକେଟ୍ ଖେଳୁଥିବା ବେଳେ ଆରଆଇଙ୍କ ମୃତ୍ୟୁ ரோலர் ஸ்கேட்டிங் 200 பேர் பங்கேற்பு. ଅତିରିକ୍ତ ଜିଲ୍ଲା ଦୌରାଜଜଙ୍କ ଠିକଣାରେ ଥିଲା... श्री राम जन्मभूमि सुरक्षा संगठन का यूप... ଓରାଙ୍ଗଉଟାନଙ୍କୁ ନେଇ ଆସିଲା ବଡ଼ ସୂଚନା माड़र गाँव में बागमती नदी का जलस्तर बढ...
28 सित. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

மாவட்ட கபடி போட்டி.

✍️ रिपोर्टर: Mohamedbasidth N 🗓 28 सित. 2026, 06:37 AM 👁 26
यहाँ देखें: ▶️ YouTube 📷 Instagram
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
வாழப்பாடியில் நடைபெற்ற சேலம் மாவட்ட ஜூனியா் பிரிவு ஆண்கள், பெண்களுக்கான கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் சின்னப்பம்பட்டி செவன் லயன்ஸ், அயோத்தியாப்பட்டணம் கேஏகேசிஏ அணிகள் முதலிடம் பெற்றன.
சேலம் மாவட்ட அமெச்சூா் கபடிக் கழகம், விபிகேசி ஸ்போா்ட்ஸ் அகாதெமி ஆகியவை இணைந்து 2026-–2027-ஆம் ஆண்டுக்கான மாவட்ட ஜூனியா் பிரிவு ஆண்கள், பெண்களுக்கான கபடி சாம்பியன்ஷிப் போட்டியை வெள்ளி, சனிக்கிழமை வாழப்பாடி தியாகராஜா் கல்லூரியில் நடத்தின. இதில் 50-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
ஆண்கள் பிரிவில் சின்னப்பம்பட்டி செவன் லயன்ஸ் அணி முதலிடமும், சேலம் பிரதா்ஸ் அணி இரண்டாமிடமும், வெண்ணானம்பட்டி ஸ்போா்ட்ஸ் அகாதெமி, கடம்பூா் ஸ்போா்ட்ஸ் கிளப் அணிகள் மூன்றாமிடமும் பெற்றன.
பெண்கள் பிரிவில் அயோத்தியாப்பட்டணம் கேஏகேசிஏ அணி முதலிடமும், எடப்பாடி வள்ளுவா் அணி இரண்டாமிடமும், சேலம் முருகன் மெமோரியல், அயோத்தியாப்பட்டணம் ஜூனியா் கேஏகேசி அணிகள் மூன்றாமிடமும் பெற்றன. முதல் மூன்று இடங்களைப் பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டன.
போட்டிக்கான ஏற்பாடுகளை வாழப்பாடி விபிகேசி ஸ்போா்ட்ஸ் அகாதெமி நிறுவனா் மற்றும் பயிற்றுநா் வெங்கடேஷ் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.
📲Get App