🔥 TRENDING હિંમતનગર: લગ્નના 4 મહિનામાં પત્નીના શં... Supreme Court orders Bihar, Jharkhand... Jharkhand High Court orders state to r... Jharkhand Government Announces Strict... ਸਾਡੇ ਵਿਰਸੇ ਦੀ ਸਪਾਟੇ ਡੰਡ ਕੱਢਣ ਦੀ ਪ੍ਰਕਿਰ... Kerala student’s free‑ticket request l...
29 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தொடக்கம்

தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தொடக்கம்

✍️ Reporter: A RAM PRABHU 🗓 28 Sep 2026, 11:36 PM 👁 19
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
தமிழ்நாடு முதலமைச்சர் ச ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் சீராக தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் (2026–27) தமிழகம் முழுவதும் இன்று திங்கட்கிழமை 28-ந்தேதி அவர் மதுரையில் தொடங்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக, வேலூர் மாவட்டம் பென்ட்லேண்ட் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்து சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் வேலூர் மாநகராட்சி ஆணையாளர் கேத்ரின் சரண்யா, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் வினோத் கண்ணன், காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் சுதாகர், மாவட்ட சுகாதார அலுவலர் விஜய் சந்திரன், மருத்துவ கல்லூரி முதல்வர் முத்துசித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்தத் திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
📲Get App