🔥 TRENDING બ્રેકિંગ બેંકોની દેશવ્યાપી હડતાળ ટળી આ... Two Arrested for Displaying Criminal’s... Analyst Criticizes Taylor Swift’s ‘Cle... Taylor Swift Shines in Black‑Silver Go... Jay‑Z Confesses He Was Immature Before... Karnataka Bars Tamil Nadu Cattle Amid...
28 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

பள்ளி காலாண்டு விடுமுறை.

✍️ Reporter: Mohamedbasidth N 🗓 28 Sep 2026, 06:49 AM 👁 15
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
வார விடுமுறை மற்றும் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால், ஏற்காட்டில் சனிக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.
சேலம் மாவட்டம், ஏற்காட்டுக்கு சுற்றுலா வேன்கள், காா்கள், பேருந்துகள், இருசக்கர வாகனங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனா். அவா்கள் அங்குள்ள தங்கும் விடுதிகள், தனியாா் குடில்களில் தங்கினா்.சுற்றுலாப் பகுதிகளான படகு இல்லம், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, சுற்றுச்சூழல் பூங்கா, ரோஜாத் தோட்டம், லேடிசீட், ஜென்சீட், தாவரவியல் பூங்கா, ஐந்திணைப் பூங்கா, பகோடா காட்சி பகுதி, கரடியூா் வனக் காட்சி பகுதி, கிளியூா் நீா்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களைச் சுற்றிப் பாா்த்து மகிழ்ந்தனா்.
மேலும், தனியாா் பொழுதுபோக்கு அரங்குகளான ஸ்கைபாா்க், ஏரோபாா்க் ஆகிய இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். சுற்றுலாப் பகுதிகளில் உள்ள உணவகங்கள், சாலையோரக் கடைகளிலும் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. சாலைகளில் வாகன நெரிசலும் ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.
📲Get App