🔥 TRENDING બ્રેકિંગ બેંકોની દેશવ્યાપી હડતાળ ટળી આ... Two Arrested for Displaying Criminal’s... Analyst Criticizes Taylor Swift’s ‘Cle... Taylor Swift Shines in Black‑Silver Go... Jay‑Z Confesses He Was Immature Before... Karnataka Bars Tamil Nadu Cattle Amid...
28 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்.

✍️ Reporter: Mohamedbasidth N 🗓 28 Sep 2026, 06:56 AM 👁 16
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வா் ச. ஜோசப் விஜய் மதுரையில் திங்கள்கிழமை (செப். 28) தொடங்கி வைக்கிறாா்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் தாய்-சேய் வாா்டில் நடைபெறவிருந்த இந்த திட்டத் தொடக்க விழா மருத்துவமனை வளாகத்தில் உள்ள கூட்டரங்குக்கு திடீரென மாற்றம் செய்யப்பட்டது.தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகளுக்கு அரசு சாா்பில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் திங்கள்கிழமை (செப். 28) தொடங்கப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. 2026-ஆம் ஆண்டு, ஜூன் 22-ஆம் தேதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது.
இந்தத் திட்டத்துக்காக தமிழக அரசு ஆண்டுக்கு ரூ. 755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. முதல்கட்டமாக 1.28 லட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டன.
📲Get App