🔥 TRENDING ગડત ગામના કોળીવાડ ફળિયામાં ગણપતિ મૂર્ત... Accident સાબરકાંઠા એસ.ઓ.જી. દ્વારા પ્રોહીબીશનના... बिजली विभाग की लापरवाही से किसान की भै... ધાંગધ્રામાં જાહેરમાં જુગાર રમતા ચાર ઝડ... বরুইপুর আদালত চত্বরে আইনজীবী হেনস্থার...
24 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
நியாய விலை கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்களின் இருப்பு, தரம் குறித்து ஆட்சியர் ஆய்வு

நியாய விலை கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்களின் இருப்பு, தரம் குறித்து ஆட்சியர் ஆய்வு

✍️ Reporter: A RAM PRABHU 🗓 24 Sep 2026, 07:39 PM 👁 9
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.எஸ். லீலா அலெக்ஸ் இன்று (24-ந்தேதி வியாழக்கிழமை) பலவன்சாத்துகுப்பத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, நியாய விலை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் பொருட்களின் இருப்பு, தரம் மற்றும் எடை அளவு ஆகியவற்றை ஆய்வு செய்தார். பொருட்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா, உரிய அளவில், குறித்த நேரத்தில் நியாய விலை கடைகளுக்கு அனுப்பப்படுகிறதா என்பது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு மண்டல மேலாளர் ரமேஷ் கண்ணா, மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், தனி வட்டாட்சியர் (குடிமைப் பொருள்) தேவிகலா, வேலூர் வட்டாட்சியர் உதயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
📲Get App