🔥 TRENDING Vijay Deverakonda’s New Look Shines in... Union Minister Kiren Rijiju says Aruna... Jammu & Kashmir clinches YSPA National... Landmine Discovered and Neutralised Al... Two-Day IIM Jammu Summit Launched to T... BJP cadres march to Mangalore airport...
09 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
குடியாத்தம்: பெரியார் நகர் மற்றும் போஸ் பேட்டை பகுதிகளில் கால்வாய்களை தூர்வாரும் பணி துவக்கம்!
Local

குடியாத்தம்: பெரியார் நகர் மற்றும் போஸ் பேட்டை பகுதிகளில் கால்வாய்களை தூர்வாரும் பணி துவக்கம்!

✍️ Reporter: S Dinesh 🗓 21 Sep 2026, 12:54 PM 👁 51
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

குடியாத்தம் பெரியார் நகர் மற்றும் போஸ் பேட்டை கூடநகரம் சாலையில் உள்ள பெரிய கால்வாய்களில் உள்ள கழிவு அடைப்புகளை இயந்திரங்கள் கொண்டு தூர்வாரும் பணியை நகரமன்ற தலைவர் எஸ். சௌந்தர்ராசன் துவக்கி வைத்தார்.

குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் போஸ் பேட்டை கூடநகரம் செல்லும் சாலையில் உள்ள பெரிய கால்வாய்களில் ஏற்பட்டுள்ள கழிவு அடைப்புகளை இயந்திரங்கள் கொண்டு தூர்வாரும் பணிகள் இன்று தொடங்கப்பட்டன. இப்பணிகளை குடியாத்தம் நகரமன்ற தலைவரும், நகர திமுக கழக செயலாளருமான எஸ். சௌந்தர்ராசன் பி.ஏ. அவர்கள் நேரில் பார்வையிட்டு, மேற்பார்வை செய்து துவங்கி வைத்தார்.

இப்பகுதிகளில் உள்ள பெரிய கால்வாய்களில் கழிவுகள் தேங்கி அடைப்பு ஏற்பட்டதால், நவீன இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு கால்வாய்களில் உள்ள கழிவுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த தூர்வாரும் பணி துவக்க நிகழ்வின் போது, நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
📲Get App