🔥 TRENDING Jodhpur Weather: No Rain Expected Unti... Rajasthan Murder Accused Arrested in G... Rajasthan claims ownership of former J... પ્રધાનમંત્રી 25 વર્ષની સેવા પ્રેરિત 'સ... વાંસદા-વઘઈ રોડ પર Ertiga કાર ટાયર ફાટવ... શ્રી ગજાનન ગ્રુપે સુરત જિલ્લાના માંગરો...
20 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

கடலூர் மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் வரவில்லையா?

✍️ Reporter: Sundar M 🗓 20 Sep 2026, 10:47 PM 👁 14
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

கடலூர் மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் வரவில்லையா?

கடலூர் மாவட்டத்தில் வருவாய் துறையின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத காரணத்தினால் தற்போது ஆகஸ்ட் 2026 மாதத்திற்கு பணம் 5232 பயனாளிகளுக்கு பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்க இயலவில்லை.

எனவே மேற்கண்ட பயனாளிகளுக்கு தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைப்பதற்கு கால தாமதம் ஏற்படக்கூடும் என்பதால் துரிதமாக ஓய்வூதியம் வழங்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் (Indian Post Payment Bank ) மூலமாக புதிய வங்கி கணக்கு தொடங்குவதற்கு எதிர்வரும் 21.09. 2026 திங்கட்கிழமை அன்று காலை 10.00மணிமுதல் மாலை 5.00 மணி வரை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் தனி வட்டாட்சியர் மற்றும் அஞ்சல் அலுவலர்களுடன் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதால் முகாமில் ஓய்வூதியம் வரவு வைக்கப்படாத பயனாளிகள், வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத பயனாளிகள் *ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் தொலைபேசி* ஆகிய ஆவணங்களுடன் திங்கட்கிழமை அன்று நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு புதிய அஞ்சல் கணக்கை துவங்கி ஓய்வூதியதாரர்கள் பயன் பெறலாம் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.


தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் கடலூர்
📲Get App