🔥 TRENDING મંગરોળમાં 8 દિવસની જૈન સંવત્સરી ઉજવણી,... ઓલપાડના કીમ ગામમાં ક્રિષ્ના એપાર્ટમેન્... કડોદરા GIDCમાં ગણેશોત્સવ દરમિયાન ટ્રાફ... Tripura Police Investigate Assault on... Tripura Uncovers 19 Illegal Rehabilita... IMD Issues Weather Warning for Delhi,...
16 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

“தமிழ்நாடு–புதுச்சேரி பார் கவுன்சில் புதிய தலைவர் செஞ்சி கே. கதிரவன்!”

✍️ Reporter: Musthafa Hussain 🗓 16 Sep 2026, 12:25 AM 👁 16
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

“தமிழ்நாடு–புதுச்சேரி பார் கவுன்சில் புதிய தலைவர் செஞ்சி கே. கதிரவன்!”

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் புதிய தலைவராக வழக்கறிஞர் செஞ்சி கே. கதிரவன் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தலைவர் பதவிக்கு கதிரவன் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரியும் ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியுமான கே.என். பாஷா அறிவித்தார்.
இதேபோல், துணைத் தலைவராக வழக்கறிஞர் ஈ. பாலமுருகனும், அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினராக முன்னாள் தலைவர் பி.எஸ். அமல்ராஜும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு–புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் கடந்த மார்ச் 30-ஆம் தேதி நடைபெற்றது. 143 வழக்கறிஞர்கள் போட்டியிட்ட இந்தத் தேர்தலில் 23 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன் பின்னர் புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான நடவடிக்கை நடைபெற்றது. �
பார் கவுன்சில் வரலாற்றிலேயே தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என தகவல் வெளியாகியுள்ளது.
📲Get App