🔥 TRENDING વીજળી પડવાથી ઇડરના જુમસરમાં બે ગાયનાં... Punjab Ends Power Cuts After Resolving... Punjab Police Arrest 10 in Jalandhar G... Three suspects arrested after veterina... Millions in cash and jewellery stolen... CM Samrat Chaudhary Announces Two-Day...
14 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
Crime

விளாத்திகுளத்தில் இரு தரப்பினரிடையே மோதல்: சம்பவ இடத்தை திருநெல்வேலி சரக டிஐஜி நேரில் ஆய்வு

✍️ Reporter: EDWIN MICHAEL RAJ 🗓 14 Sep 2026, 12:40 PM 👁 20
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சம்பவ இடத்தை திருநெல்வேலி சரக டிஐஜி இரா. திருநாவுக்கரசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் உட்கோட்டம், விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று (13.09.2026) இரவு இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலைக் கட்டுப்படுத்தச் சென்ற காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் தற்பொழுது நிலைமை விரைந்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், மோதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இச்சம்பவம் நடைபெற்ற விளாத்திகுளம் பகுதியை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு பதற்றத்தைத் தணிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, இந்த மோதலில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவல் அலுவலர்களை டிஐஜி நேரில் சந்தித்து, அவர்களின் உடல்நலம் குறித்து விசாரித்தார். சம்பவ இடத்தில் உடனிருந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சிவ பிரசாத் மற்றும் இதர காவல் அதிகாரிகளிடம், தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகள் குறித்து தேவையான ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை அவர் வழங்கினார்.
📲Get App