🔥 TRENDING Punjab Police Arrest 10 in Jalandhar G... Three suspects arrested after veterina... Millions in cash and jewellery stolen... CM Samrat Chaudhary Announces Two-Day... Special 'Pooja' Train to Run Nine Dail... Congress Wins 37 Seats in Ajmer Munici...
14 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
Local

திருநெல்வேலி மாநகரில் விடுதலை வீரர் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்

✍️ Reporter: EDWIN MICHAEL RAJ 🗓 12 Sep 2026, 01:03 PM 👁 28
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

திருநெல்வேலி மாநகரில் 69வது நினைவு தினத்தில் காங்கிரஸ் தலைவர்கள் தியாகி இமானுவேல் சேகரனுக்கு மரியாதை செலுத்தினர்.

2026 செப்டம்பர் 11 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு, திருநெல்வேலி மாநகரில் விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் 69வது நினைவு தினத்தை நினைவுகூரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் Adv.M.ராமேஸ்வரன் MA ML. அவர்களின் அறிவுறுத்தலின்படி, முன்னாள் மத்திய அமைச்சர் திரு.R.தனுஷ்கோடி ஆதித்தன் அவர்கள் கமிட்டி அலுவலக முகப்பில் வைத்து அன்னாரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், வழக்கறிஞர் மரிய குழந்தை, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் யோபு, பொதுக்குழு உறுப்பினர்கள் சொக்கலிங்க குமார், பரணி இசக்கி, OBC பிரிவு மாநில பொதுச்செயலாளர் தனசிங் பாண்டியன், துணைத் தலைவர்கள் வெள்ளை பாண்டியன், சிவகுமார், ராதாகிருஷ்ணன் INTUC, ஹரிஹரன், முன்னாள் வட்டார தலைவர் அருள்ராஜ், அமைப்புசாரா காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜாகிர் உசேன், மற்றும் செல்வம் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி, விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவுகளை உயிர்ப்பிக்கவும், அவர்களின் தியாகங்களை நினைவுகூரவும், காங்கிரஸ் கட்சியின் சமூகப் பொறுப்பை வெளிப்படுத்தவும் நடத்தப்பட்டது.
📲Get App