🔥 TRENDING કમલીવાડા ખાતે જી.એમ. દેસાઈ સ્કૂલમાં નવ... વાવ-થરાદમાં અઢી વર્ષના બાળકની હત્યા: પ... સુજાણપુરની ત્રિરંગા વિદ્યાસંકુલ ખાતે '... IPL 2027 Player Auction Set for Dec 16... IPL 2027 Mini-Auction Set for Dec 16 a... Four Drown in Sone River at Bhojpur, B...
17 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மீது ஆட்சியரிடம் புகார்!

கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மீது ஆட்சியரிடம் புகார்!

✍️ Reporter: Rajendran Rajamanickam 🗓 17 Aug 2026, 04:02 PM 👁 61
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பச்சனம்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு அப்பகுதியில் பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்ட திருவிழா நன்கொடை தொடர்பாக அப்பகுதி மக்கள் ஊர் தலைவரிடம் கணக்கு கேட்டுள்ளனர். இந்நிலையில் ஊர் தலைவரிடம் எதற்காக கணக்கு கேட்டீர்கள் என்று அப்பகுதி முன்னாள் தமிழ் மாநில காங்கிரஸ் ஒன்றிய கவுன்சிலர் சின்னையன் என்பவர் கணக்கு கேட்ட பொது மக்களுக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் கவுன்சிலர் சின்னையன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
📲Get App