🔥 TRENDING शिवपुरी में परिवार के युवक पर महिला पर... ಜಾಲಹಳ್ಳಿ 5ನೇ ವಾರ್ಡ್‌ನಲ್ಲಿ ಐದು ದಿನಗಳ ಕು... सतर्कता... ट्रेनो ं में रात 11 से सुबह... गंगापुर सिटी में गोबर से गोवर्धन बनाकर... गंगापुर सिटी मे ं महिलाओं ने सुनी भाईद... गांव के विकास के लिए रोड लाइट और CCTV...
11 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து வேலூர் மாநகராட்சி நடவடிக்கை: ரூ.6 ஆயிரம் அபராதம் விதிப்பு..

✍️ Reporter: A RAM PRABHU 🗓 11 Nov 2026, 11:05 PM 👁 17
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து வேலூர் மாநகராட்சி நடவடிக்கை; ரூ.6 ஆயிரம் அபராதம் விதிப்பு..
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் விபத்து அபாயமும் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து
சாலைகளில் திரியும் மாடுகளைப் பிடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி மாநகராட்சி உட்பட்ட ஆற்காடு சாலை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாகத் சாலையில் சுற்றி திரிந்த மாடுகளை மாநகராட்சி பணியாளர்கள் பிடித்தனர்.
மேலும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ 6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பொதுமக்களுக்கும் வாகனப் போக்குவரத்திற்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் கால்நடைகளைச் சாலைகளில் திரியவிட்டால் அவை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த நடவடிக்கைக்கு வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பாராட்டி மேலும் புதிய பேருந்து நிலையம், விருதம்பட்டு, காட்பாடி, தோட்டபாளையம், காட்பாடி சாலை, ஆபிசர் லைன், அண்ணா சாலை போன்ற பிரதான சாலைகளில் உள்ள மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுகின்றனர்.
📲Get App