🔥 ट्रेंडिंग चंडीगढ़ में Digad Breakers और Chandiga... अरुणाचल प्रदेश ने पाँच नए जलविद्युत पर... தமிழக வெற்றி கழகத்தில் பாமக இணைந்தால்... આશાપુરા ચેરિટેબલ ટ્રસ્ટ મુન્દ્રા દ્વાર... जम्मू में अक्टूबर की सबसे अधिक बारिश क... जम्मू-कश्मीर के एलजी ने कहा, क्षेत्र ब...
12 अक्टू. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

“மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராடுவோம்!” — CJP தலைவர் அபிஜீத் தீப்கே அதிரடி அறிவிப்பு!

✍️ रिपोर्टर: Musthafa Hussain 🗓 11 अक्टू. 2026, 10:48 PM 👁 26
यहाँ देखें: ▶️ YouTube
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

“மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராடுவோம்!” — CJP தலைவர் அபிஜீத் தீப்கே அதிரடி அறிவிப்பு!

டெல்லியில் அரசியல் பரபரப்பு!
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, Cockroach Janata Party (CJP) சார்பில் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தமான SIR நடவடிக்கையில் முறைகேடுகள் இருப்பதாகப் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகளைத் தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை.
இந்நிலையில், போராட்டத்துக்காக டெல்லி வந்த CJP தலைவர் அபிஜீத் தீப்கே மற்றும் நிர்வாகிகள் சௌரவ் தாஸ், ஆஷுதோஷ் ரங்கா ஆகியோர் காவல்துறையினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
பின்னர், அக்டோபர் 11ஆம் தேதி நீதிமன்ற உத்தரவின் பேரில் மூவரும் விடுவிக்கப்பட்டனர். அடுத்த ஓராண்டுக்கு அமைதியையும் நல்ல நடத்தையையும் பேணுவதற்காக 50 ஆயிரம் ரூபாய் பிணையப் பத்திரம் அளிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, “போராட்டம் நடத்த மாட்டோம் என்று எந்தப் பத்திரத்திலும் கையெழுத்திடவில்லை; மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராடுவோம்” என்று அபிஜீத் தீப்கே தெரிவித்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
நீதிமன்றத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு போராட்டம் தொடருமா? டெல்லியில் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் என்னவாக இருக்கும்? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
📲Get App