Sports
குடியாத்தத்தில் 52-வது ஜூனியர் ஆண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி: நகர மன்ற தலைவர் சிறப்புரை
Watch on:
▶️ YouTube
வேலூரில் நடைபெற்ற 52-வது ஜூனியர் ஆண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில், 38 மாவட்டங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களை நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தர்ராசன் பாராட்டி, போட்டியைத் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் வேலூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் இணைந்து, குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 52-வது ஜூனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் மாபெரும் கபடி போட்டியை நடத்தினர். இந்த நிகழ்ச்சி குடியாத்தத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த நகர மன்ற தலைவர் மற்றும் நகர திமுக கழக செயலாளர் எஸ். சௌந்தர்ராசன், பி.ஏ., போட்டியில் பங்கேற்க வந்திருந்த 38 மாவட்டங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் சிறப்புரையாற்றி, விழாவைத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட திமுக கழக துணைச் செயலாளர் ஜி.எஸ். அரசு, குடியாத்தம் நகர துணைச் செயலாளர் மற்றும் நகர் மன்ற உறுப்பினர் எம். மனோஜ் ஆகியோர் உடனிருந்தனர். அமெச்சூர் கபடி கழகத்தின் மாவட்ட கபடி குழு தலைவர்கள், துணைத் தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பு விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.