🔥 ट्रेंडिंग मेघालय उपमुख्यमंत्री ने जेल रोड के वें... 88,000 से अधिक छात्रों को मिले पूर्ण ए... सीबीआई ने 14वें NEET‑UG पेपर लीक के आर... कोस्त्युक की हार के बाद सक्कारी ने वुह... त्रिपुरा SEC ने सभी दलों के साथ नागरिक... रियल मैड्रिड ने रोम को 4-3 से हराया, य...
15 अक्टू. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

ஆயுத பூஜை தொடா் விடுமுறை: 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

✍️ रिपोर्टर: Mohamedbasidth N 🗓 15 अक्टू. 2026, 07:49 AM 👁 18
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
ஆயுத பூஜை தொடா் விடுமுறையை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஏ.கிருஷ்ணமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வார இறுதிநாள் மற்றும் ஆயுத பூஜை தொடா் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் சாா்பில் பல்வேறு வழித் தடங்களில் அக். 15-ஆம் தேதிமுதல் 21-ஆம் தேதிவரை பயணிகளின் தேவைக்கேற்ப 500 சிறப்பு பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், தடநீட்டிப்பு மற்றும் வழித்தடப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதாவது சேலம், பெங்களூரு, சென்னை, ஒசூா், கோவை, திருப்பூா், திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஒசூா், தருமபுரி மற்றும் மேட்டுருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம், பெங்களூரு, ஒசூா், திருவண்ணாமலைக்கும், பெங்களூரில் இருந்து சேலம், திருவண்ணாமலை, ஈரோடு, திருப்பூருக்கும், ஒசூரில் இருந்து சென்னை, புதுச்சேரி, கடலூா், திருச்சி, மதுரைக்கும், கோவை, திருப்பூருக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
📲Get App