अपराध
வேலூர் மாவட்டத்தில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் கைது
यहाँ देखें:
▶️ YouTube
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு உட்கோட்டம் ஓங்கபாடி கிராமத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட நான்கு நபர்களை வேப்பங்குப்பம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு உட்கோட்டம், ஓங்கபாடி கிராமத்தில் சமீபகாலமாக தாங்கல் கிராமத்துடன் இருந்த முன்விரோதம் காரணமாக இளைஞர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதற்கு முன் ஏற்பட்ட சிறிய வாய் சண்டையின் தொடர்ச்சியாக, தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த நான்கு நபர்கள் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து வேப்பங்குப்பம் காவல்துறையினருக்கு புகார் கிடைத்ததும், காவல்துறையினர் துரிதமாக சம்பவ இடத்திற்கு சென்று நிகழ்வுகளை கட்டுப்படுத்தினர். மதுபோதையில் பிரச்சனையில் ஈடுபட்டிருந்த நான்கு நபர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் குற்ற எண் 254/2025 பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு பி.என்.எஸ் (BNS) சட்டத்தின் 296(b), 115(2), 118(1) மற்றும் 351(3) பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நான்கு நபர்களும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.