🔥 ट्रेंडिंग वाराणसी के काशी अन्नपूर्णा मठ में अन्न... Today jkpc persident and MLA Handwara... ਹੋਸ਼ਿਆਰਪੁਰ ਬੈਂਕ ਵਿੱਚ ਬਾਈਕ ਚੋਰੀ: ਮਹਿਲਾ... बीकानेर के गिराजसर में पुश्करणा पुरोहि... Another milestone in the development... ଝାରବନ୍ଧ ପୋଲିସ ର ବଡ଼ ସଫଳତା, ରାମଲାଲ ହତ୍ୟ...
10 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! ஒரே கடையில் 3 ஆண்டுகள் மட்டுமே பணியாற்ற அனுமதி!

✍️ रिपोर्टर: Musthafa Hussain 🗓 10 नव. 2026, 09:22 PM 👁 41
यहाँ देखें: ▶️ YouTube 📘 Facebook 📷 Instagram
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! ஒரே கடையில் 3 ஆண்டுகள் மட்டுமே பணியாற்ற அனுமதி!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு புதிய பணியிட மாற்றக் கொள்கையை டாஸ்மாக் நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது.
இதன்படி, ஒரே மதுபானக் கடையில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் கட்டாயமாக வேறு கடைகளுக்கு மாற்றப்பட உள்ளனர்.
மேலும், விற்பனை அடிப்படையில் கடைகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஆட்கள் அதிகமாக உள்ள கடைகளில் இருந்து ஆட்கள் பற்றாக்குறை உள்ள கடைகளுக்கு பணியாளர்கள் மாற்றப்பட உள்ளனர்.
இதற்கான பணிகளை நவம்பர் 25ஆம் தேதிக்குள் முடிக்கவும், நவம்பர் 30ஆம் தேதிக்குள் அறிக்கைகளைச் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரே கடையில் நீண்டகாலமாகப் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு இந்தப் புதிய நடைமுறை எந்த அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது?
டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்தப் புதிய உத்தரவு தமிழக அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
📲Get App