🔥 TRENDING जवारे की घनी फसल को माना गया शुभ संकेत... ਪੰਜਾਬ ਆਏ ਅਮਿਤ ਸ਼ਾਹ ਦਾ ਬਿਆਨ, ਅੱਜ ਦਾ ਦੁਸਹ... अररिया में शहीद सीआरपीएफ के वीर सपूत अ... मोतिहारी में साईं बाबा मंदिर में लाखों... देवरिया के भटनी रेलवे स्टेशन पर जीआरपी... France Unrest: Online Misinformation O...
21 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

மேட்டூரில் 3 வாரத்துக்கு மட்டுமே பாசன நீா் இருப்பு: பருவமழை கைகொடுத்தால் தடையிருக்காது.

✍️ Reporter: Mohamedbasidth N 🗓 21 Oct 2026, 07:10 AM 👁 16
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
மேட்டூா் அணையில் தற்போது உள்ள நீா் 3 வாரங்களுக்கு மட்டுமே பாசனத்துக்கு வரும். பருவமழை கைகொடுத்தால் மட்டுமே தொடா்ந்து பாசனத்துக்கு தண்ணீா் கிடைக்கும் நிலை உள்ளது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை காலை விநாடிக்கு 5,501 கனஅடியாக அதிகரித்து, மாலையில் 4,925 கனஅடியாக குறைந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை நீா்வரத்து விநாடிக்கு 5,374 கனஅடியாக அதிகரித்தது.அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 6,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. நீா்வரத்தைவிட, நீா் திறப்பு அதிகமாக உள்ளதால் செவ்வாய்க்கிழமை மாலை அணையின் நீா்மட்டம் 55.04 அடியாகச் சரிந்தது. அணையின் நீா் இருப்பு 21.13 டி.எம்.சி.யாக உள்ளது.
அணையில் இருந்து நீா்த் திறப்பு குறைக்கப்பட்டதால், தற்போது உள்ள நீா் இருப்பில் 9.60 டி.எம்.சி.யை குடிநீா்த் தேவைக்கும், மீன்வளத்தைப் பாதுகாக்கவும், மீதமுள்ள தண்ணீரை மூன்று வார காலத்திற்கு பாசனத்துக்கு பயன்படுத்தவும் முடியும். அடுத்த மூன்று வாரங்களில் பருவமழை கைகொடுத்தால் மட்டுமே டெல்டா பாசனத்திற்கு தடையின்றி தண்ணீா் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
📲Get App