யானை தந்தங்கள் விற்க முயற்சி 3 பேர் கைது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள செதுக்கரைப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் கடத்தி விற்க முயன்ற 2 யானைத் தந்தங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கே.வி. குப்பம் அடுத்துள்ள பனமடங்கி கிராமத்தைச் சேர்ந்த திருவேங்கடம் 39, அனைக்கட்டு தாலுக்கா ஒடுகத்தூரை அடுத்த பாக்கப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முனிசாமி 49, ஆட்டோ ஓட்டுனர் கோவிந்தராஜ் 37 ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த கடத்தல் குறித்து ரகசிய தகவலறிந்த மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் உத்தரவின் பேரில் குடியாத்தம் வன அலுவலர் தலைமையில் வன துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட தந்தங்களுடன் கைது செய்யப்பட்ட 3 நபர்களிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.