🔥 TRENDING ફતેપુરામાં ડબગર સમાજ દ્વારા ગરબાનું આય... भीरा-पलिया मार्ग पर ट्रक-बाइक भिड़ंत:... Environmental Thriller 'Sacrifice' Sco... શિહોરીની એમ. વાલણી હાઈસ્કૂલમાં પરંપરાગ... ISRO and NASA Ready Final Test Launch... Rain Break at Chinnaswamy Stadium Sets...
17 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
Local

வாலாஜா அருகே கிரைண்டரில் சிக்கிய 2 வயது சிறுவனை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்

✍️ Reporter: S Dinesh 🗓 17 Oct 2026, 02:10 PM 👁 24
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே ஓடிக் கொண்டிருந்த கிரைண்டரில் தவறுதலாக கையை விட்ட 2 வயது சிறுவனை, தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி பத்திரமாக மீட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே, ஓடிக் கொண்டிருந்த கிரைண்டரில் எதிர்பாராதவிதமாக 2 வயது சிறுவன் ஒருவன் தனது கையை விட்டான். இதில் அவனது கை கிரைண்டரில் சிக்கிக்கொண்டது.

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக கிரைண்டரை நிறுத்தினர். ஆனால், சிறுவனின் கை கிரைண்டரில் இருந்து பிரிக்க முடியாத அளவுக்கு சிக்கியிருந்தது.

இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு, கிரைண்டரை கவனமாக வெட்டி, சிறுவனின் கையை பத்திரமாக மீட்டனர். சிறுவனுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்ட நிலையில், முதலுத சிகிச்சை அளிக்கப்பட்டது.
📲Get App