🔥 TRENDING Punjab-Haryana HC orders police protec... Madhya Pradesh Bids Farewell to Monsoo... અમદાવાદ: થેલેસેમિયા ગ્રસ્ત બાળકો માટે... અમદાવાદ: થેલેસેમિયા ગ્રસ્ત બાળકો માટે... କାମାକ୍ଷାନଗର ଓଭରବ୍ରିଜ ଉପରେ ଟ୍ରକ ଦୁର୍ଘଟଣ... 🚨 सड़क नहीं होने से मरीज को झोली में...
29 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

அக்டோபா் 2 முதல் சேலம் - சென்னை இடையே தினமும் 2 விமானங்கள் இயக்கம்

✍️ Reporter: Mohamedbasidth N 🗓 29 Sep 2026, 07:24 AM 👁 11
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
சேலம்-சென்னை இடையே தினமும் 2 விமானங்களை இண்டிகோ நிறுவனம் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம்-சென்னை இடையே தற்போது தினமும் மாலை நேரத்தில் மட்டும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அக்டோபா் 25-ஆம் தேதி முதல் சேலம் - சென்னை இடையே தினமும் இரண்டு இண்டிகோ விமானங்கள் இயக்கப்படவுள்ளன
சென்னையிலிருந்து காலை 11 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12:10-க்கு சேலம் வரும் விமானம், இங்கிருந்து 12:30 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1:35 மணிக்கு சென்னையை அடைகிறது. அதேபோல மற்றொரு விமானம் பிற்பகல் 3:40 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மாலை 4:50 மணிக்கு சேலம் வருகிறது. அந்த விமானம் மாலை 5:10-க்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு 6:15 மணிக்கு சென்னையை அடைகிறது.

இந்த புதிய விமான சேவையால், தொழில்முனைவோா் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைவா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
📲Get App