🔥 TRENDING कुशीनगर के द रैंबो लोरेटो अकादमी के सं... પાંડેસરામાં જી.આઇ.ડી.સી. લક્ષ્મીપતિ ફે... Assam Police Detain Man Accused of Spy... Jharkhand Asian Games Gold Medalists R... Tata Steel Zoo Wraps Up Wildlife Week... Jharkhand’s Golden Girls Return Home t...
04 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்: 15-ம் தேதிக்குள் எமிசில் விவரம் பதிவேற்ற உத்தரவு!

✍️ Reporter: A RAM PRABHU 🗓 04 Oct 2026, 08:21 PM 👁 16
Watch on: 📘 Facebook
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
தமிழ்நாட்டில் 2026–27-ம் கல்வியாண்டில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்குவதற்காக, மாணவர்களின் விவரங்களை எமிஸ் (EMIS) தளத்தில் வரும் 15-ம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
​இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்கக இணை இயக்குநர், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
​ இதற்காக மாணவர்களின் முழு விவரங்களையும் அக்டோபர் 1-ம் தேதி தொடங்கி வரும் 15-ம் தேதி வரை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இலவச பேருந்து பயண அட்டை பெற இதுவரை விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படாத மாணவர்களின் சுயவிவரம், புகைப்படம் மற்றும் புதிதாகச் சேர்க்கை பெற்ற மாணவர்களின் விருப்பம் அல்லது விருப்பமின்மை விவரங்களை எமிஸ் தளத்தில் தவறாமல் பதிவேற்ற வேண்டும்
அரசு மற்றும் நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இப்பணியை முடிக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.
​மேலும், இப்பணியை மேற்கொள்வதற்காக 'எமிஸ்-யூசர் மேனுவல்' வழிகாட்டியும் வழங்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📲Get App