🔥 TRENDING વિરમગામ રેલવે સ્ટેશન ચાર રસ્તા પાસે આવ... रतलाम न्यूज நாகை ஆட்சியரகத்தில் பல்வேறு கோரிக்கைகள... સાબરકાંઠા માં રાજસ્થાનના ગેરકાયદેસર વિ... Devnimori Buddha Relics Arrive Back in... Seva Aapke Dwar 2.0 Phase‑II Starts in...
26 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

நாகை ஆட்சியரகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஒப்பாரி வைத்து ஆர்பாட்டம்

✍️ Reporter: MAHENDRAN M 🗓 26 Nov 2026, 12:22 AM 👁 15
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
தேர்தல் வாக்குறுதி படி முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி கோரி நாகையில் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்: இறந்தவர் போல் வாயைக் கட்டிக்கொண்டு அமர்ந்த விவசாயி* கோரிக்கைகளை விளக்கி கும்மியடித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் சிறிது நேரம் பரபரப்பு*



நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, தேர்தல் வாக்குறுதியின்படி கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், விவசாயிகள் மற்றும் பெண்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, பலமுறை போராட்டங்கள் நடத்தியும் இதுவரை பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படாததைக் கண்டித்து நூதன முறையில் போராட்டம் நடைபெற்றது.இதில், விவசாயி ஒருவர் கழுத்தில் மாலையுடன், வாயைக் கட்டிக்கொண்டு இறந்தவர் போல் அமர்ந்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அவரைச் சுற்றி பெண்கள் மற்றும் விவசாயிகள் கும்மியடித்தபடி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோஷங்களை எழுப்பினர். இந்த நூதனப் போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கூட்டுறவு கடன் சங்கங்களில் பெறப்பட்ட பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வதாக தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும், அந்த வாக்குறுதியை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நாகை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒருபோக சாகுபடி மேற்கொள்ளப்படும் சூழலில், போதிய தண்ணீர் கிடைக்காததால் விவசாயப் பணிகளை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்கள் நிலவி வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர். ஏற்கெனவே கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்ற பயிர்க்கடனையே திரும்பச் செலுத்த முடியாத பொருளாதார நெருக்கடியில் விவசாயிகள் தவித்து வரும் நிலையில், பழைய கடன் நிலுவையில் இருப்பதால் நடப்பு ஆண்டிற்கான புதிய பயிர்க்கடனைப் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், நடப்பு ஆண்டிற்கான சாகுபடிப் பணிகளைத் தடையின்றி மேற்கொள்ளவும், தேர்தல் வாக்குறுதியின்படி கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை எவ்வித நிபந்தனையுமின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், விவசாயிகளின் கோரிக்கையை அரசு உடனடியாகப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
📲Get App