🔥 TRENDING Shillong Lajong Aims to Reclaim Glory... Rajasthan CM vows grand showcase of st... Supreme Court Orders Rajasthan HC to H... College teachers in Amritsar go on col... भारतीय किसान संघ कासगंज की बैठक में सं... ED raids illegal Dream Medios colonies...
28 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

தொகுதி வரையறை என்ற பெயரில் நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கையை உயர்த்த நினைக்கும் மத்திய அரசை கண்டித்து கீழ்வேளூர் கடைவீதியில் விசிக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

✍️ Reporter: MAHENDRAN M 🗓 28 Nov 2026, 06:42 PM 👁 27
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் கடைவீதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கீழ்வேளூர் தொகுதி மாவட்டச் செயலாளர் நாக.அருட்செல்வன் தலைமையில் நடைப்பெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பேரணியாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.இதில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். மத்திய அரசு நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தொகுதி எண்ணிக்கையை உயர்த்த கூடாது என்றும் , மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.இந்த ஆர்பாட்டத்தில் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில செயலாளர் அறிவழகன், விவசாய பாதுகாப்பு இயக்க மாநில துணை செயலாளர் அரா.பேரறிவாளன், மாவட்ட பொருளாளர் குமரவேல், மாவட்ட செய்தி தொடர்பாளர் மதியழகன், மாவட்ட துணை செயலாளர்கள் ஜெயச்சந்திரன், பாவேந்தன், ராஜேஷ், ஒன்றிய செயலாளர்கள் முருகானந்தம், சுவாமிநாதன், இரமேஷ், ரவிசந்திரன், சிவராமன், பேரூர் செயலாளர் குணா மற்றும் நிர்வாகிகள் வேலாயுதம், குவளை செல்லப்பா, சேகர், முத்தமிழ்வளவன், மகளிரணி நிர்வாகி வனிதா இயேசு, கீழ்வேளூர், கீழையூர், ஒன்றியங்களுக்குட்பட்ட விசிகவினர் கலந்துக்கொண்டனர்.
📲Get App