🔥 TRENDING Gujarat Deputy CM urges social boycott... અમદાવાદ પોલીસબેડામાં મોટો ફેરફાર, 31 P... ठाकुर उदय शंकर का बयान: आनंद मोहन प्रक... Gujarat tops India with 62 compostable... Gujarat CM reviews 16 departments, che... राष्ट्रीय लोकतांत्रिक पार्टी ने नागौर,...
27 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

வேலூர் மாவட்டத்தில் குழந்தைத் திருமணத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு!

✍️ Reporter: A RAM PRABHU 🗓 27 Nov 2026, 11:36 PM 👁 27
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், ஒடுகத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று 27 ந்தேதி நடைபெற்ற வளரும் பெண்களுக்கான இளஞ்சிவப்பு கிராம சபைக் கூட்டத்தில், குழந்தைத் திருமணத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது.
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், குழந்தைத் திருமணத்தைத் தடுப்பது மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.விஜய் சந்திரன், மகளிர் திட்ட இயக்குநர் ப.ஜெயசுதா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் இரா.சுமதி, துணை ஆட்சியர் பெ.சுரேஷ்குமார், சிங்கப்பெண் அதிரடிப்படை உதவி ஆய்வாளர் ச.ஜெயந்தி, குழந்தை பாதுகாப்பு அலுவலர் சங்கீத், அணைக்கட்டு வட்டாட்சியர் மகேஸ்வரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பரிசுகள் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது
குழந்தைத் திருமணத்தை முற்றிலும் ஒழித்து, பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதி செய்யும் நோக்கில் இக்கூட்டம் நடைபெற்றது.
📲Get App