மீனவர்களின் வாழ்வுரிமைக்கான கோரிக்கை ஆர்ப்பாட்டம்
உலக மீனவர் தினமான நவம்பர் 21 இன்று சனிக்கிழமை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் அருகில் மீனவர்களின் வாழ்வுரிமைக்கான மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் நிவாரண திட்டங்களை பெறுவதற்கான வயது வரம்பு 60 இலிருந்து 75 ஆக உயர்த்த வேண்டும். மீனவர்களுக்காக தனி வங்கி உருவாக்கி குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும். விசைப்படகுகள் கரையோரம் தொழில் செய்வதை முழுமையாக தடை செய்ய வேண்டும். உட்பட 17 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட மீன் பிடி தொழிலாளர் யூனியன் தலைவர் பால்சாமி தலைமையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்ட கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது