🔥 TRENDING Arunachal Pradesh Governor praises Arm... Assam and Arunachal Pradesh officials... Arunachal Pradesh Congress Committee U... JKBOSE launches workshop to develop ne... J&K Bank launches Project HRIDHAAN for... Three IAS officers moved from Delhi to...
20 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

கார்த்திகை தீபத் திருவிழா: வேலூர், காட்பாடி பக்தர்களுக்காக சிறப்பு இரயில்கள் அறிவிப்பு!

✍️ Reporter: A RAM PRABHU 🗓 19 Nov 2026, 10:05 AM 👁 45
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

நவம்பர் 22 முதல் 25 வரை சிறப்பு ரயில்கள் இயக்கம் – திருவண்ணாமலை செல்லும் பக்தர்களுக்கு தெற்கு ரயில்வே ஏற்பாடு.

கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக தெற்கு இரயில்வே சார்பில் வேலூர், காட்பாடி மற்றும் விழுப்புரம் இடையே சிறப்பு மெமு இரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் நவம்பர் 22 முதல் 25-ஆம் தேதி வரை இந்த சிறப்பு இரயில்கள் இயக்கப்பட உள்ளன.
காட்பாடி திருவண்ணாமலை இடையே சிறப்பு இரயில்கள்
நவம்பர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் 12 பெட்டிகள் கொண்ட மெமு சிறப்பு இரயில்கள் இயக்கப்படுகின்றன.
காட்பாடியில் இருந்து இரயில் எண் 06146 மதியம் 3.30 மணிக்கும், 06148 இரவு 8.55 மணிக்கும் புறப்பட்டு மாலை 5.30 மணி மற்றும் இரவு 11.05 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.
மறுமார்க்கமாக, திருவண்ணாமலையில் இருந்து இரயில் எண் 06145 மதியம் 12.35 மணிக்கும், வண்டி எண் 06147 மாலை 6 மணிக்கும் புறப்பட்டு முறையே மாலை 3 மணி மற்றும் இரவு 8 மணிக்கு காட்பாடி வந்தடையும்.

விழுப்புரத்திலிருந்து வேலூர் கன்டோன்மென்ட் இடையே சிறப்பு ரயில் நவம்பர் 22, 23, 24 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் இருந்து இரவு 10.40 மணிக்கு 8 பெட்டிகள் கொண்ட மெமு சிறப்பு இரயில் எண் 06062 புறப்பட்டு, திருவண்ணாமலை வழியாக மறுநாள் அதிகாலை 1.45 மணிக்கு வேலூர் கன்டோன்மென்ட் வரை.
மறுமார்க்கமாக, நவம்பர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் வேலூர் கன்டோன்மென்ட்டில் இருந்து அதிகாலை 2.05 மணிக்கு வண்டி எண் 06061 புறப்படும் இரயில், காலை 5 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.
இந்தச் சிறப்பு இரயில்கள் அனைத்தும் முன்பதிவில்லாத மெமு இரயில்களாக இயக்கப்படுகின்றன. பயணிகள் இரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுண்டர்களிலும், அல்லது அலைபேசியில் Rail One என்ற செயலி மூலமாகவும் டிக்கெட் பெற்றுப் பயணிக்கலாம்.
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தெற்கு இரயில்வே அறிவித்துள்ள இந்தச் சிறப்பு இரயில் சேவைகள் வேலூர், காட்பாடி விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
📲Get App