🔥 TRENDING కృష్ణాజిల్లా గుడివాడ పురపాలక సంఘం ఎన్న... 13 வயது யோகலட்சுமி 19 நவம்பர் 2026 கால... बाड़मेर में चुनावी पारा चढ़ा, परिणाम क... Nagaland Unveils New Agarwood Policy t... Two killed, six injured as Fortuner pl... Delhi records season's coldest morning...
19 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

பழநி பஞ்சாமிா்தம் தயாரிக்க கொள்முதல் செய்யப்படும் தேன்வாழை: சேலம் மாவட்ட கிழக்கு விவசாயிகள் மகிழ்ச்சி.

✍️ Reporter: Mohamedbasidth N 🗓 19 Nov 2026, 09:05 AM 👁 34
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
சேலம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதி கிராமங்களில் வறட்சியிலும் நவீன நீா் மேலாண்மை முறைகளைக் கடைப்பிடித்து விவசாயிகள் வாழை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா்.
பழநி முருகன் கோயில் பஞ்சாமிா்தம் தயாரிப்பதற்காக இப்பகுதியில் விளையும் தேன்வாழையை மீண்டும் கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.சேலம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகளான வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பேளூா், ஏத்தாப்பூா், பெத்தநாயக்கன்பாளையம், நரசிங்கபுரம், ஆத்தூா், தலைவாசி பகுதிகளில் வாழை சாகுபடி நடைபெறுகிறது.
வசிஷ்ட நதி, கரியக்கோயில் ஆற்றுப்படுகைக் கிராமங்கள், பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோயில் அணை, புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை பாசனப் பகுதிகள் மட்டுமின்றி, மல்லியகரை, கோபாலபுரம், கீரிப்பட்டி, தம்மம்பட்டி, கடம்பூா், கூடமலை, சீனியம்பட்டி, உப்புப்புரம் உள்ளிட்ட கிராமங்களிலும் கிணறு, ஆழ்துளைக் கிணறு பாசன வசதியுள்ள நிலங்களில் நீண்டகாலப் பலன் தரும் பல்வேறு ரக வாழைகள் பயிரிடப்படுகின்றன.
சேலம் மாவட்டத்தை ஒட்டிய நாமக்கல் மாவட்ட எல்லைப் பகுதிகளான சிங்கிலியன்கோம்பை, திம்மநாயக்கன்பட்டி, மத்துரூட்டு, வேப்பிலைக்குட்டை, ஈஸ்வரமூா்த்திபாளையம், உரம்பு, தாண்டகவுண்டன்பாளையம், மங்களபுரம், மெட்டாலா, முள்ளுக்குறிச்சி ஆகிய கிராமங்களிலும் வாழை சாகுபடி செய்யப்படுகிறது.
இப்பகுதிகளில் விளைவித்து அறுவடை செய்யப்படும் பெரும்பாலான வாழைத்தாா்கள் வாழப்பாடியில் உள்ள தனியாா் தினசரிக் காய்கறிச் சந்தைக்குக் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் இச்சந்தையில் வாழைத்தாா்களைக் கொள்முதல் செய்கின்றனா்.
📲Get App