🔥 TRENDING बिलासपुर के पठान मोहल्ले में सीसी रोड... बिलासपुर के शालेय क्रिकेट में उम्र और... રાજકોટમાં ખાનગી થિયેટરે દારૂ સાથે બર્થ... 3 सूत्री मांगों को लेकर पटवारी हड़ताल... गोरखपुर में बुलडोजर टक्कर से मरे 14 वर... चंद्रपूरमध्ये पोलीस अधीक्षक आयुष नोपान...
19 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

குடியாத்தத்தில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

✍️ Reporter: A RAM PRABHU 🗓 19 Nov 2026, 07:04 AM 👁 56
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

குடியாத்தம் அருகே சட்டவிரோதமாக போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சுமார் 200 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவரை குடியாத்தம் நகர போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த மேலாளத்தூர் கிராமம், ரயில்வே மேம்பாலம் அருகே குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் சிவகுமார், உதவி ஆய்வாளர் ராஜி மற்றும் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த முஸ்தக் (25), முகமது இலியாஸ் என்பவரின் மகனை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
முஸ்தக் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் சுமார் 200 போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், முஸ்தக்கை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.
போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் குடியாத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
📲Get App